கிறிஸ்தவர்களின் புனிதமான 40 நாட்கள் தவக்காலம் – ஏப்.2ல் புனித வெள்ளி, ஏப்.4ல் ஈஸ்டர் பண்டிகை | Holy 40 Days of Lent for Christians – Good Friday on April 2 and Easter on April 4

Astrology

oi-Jeyalakshmi C

|

சென்னை: இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாட, தங்களைத் தயாரிக்கும் வகையில் 40 நாள் நோன்புக் காலம் சாம்பல் புதனுடன் தொடங்கி அனுசரிக்கப்படுகிறது. மார்ச் 28ம் தேதி குருத்தோலை ஞாயிறு, ஏப்ரல் 2ம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஏப்ரல் 4ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

தவக் காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது. மனிதன் மண்ணாக இருக்கிறான், மண்ணுக்குத் திரும்புவான் என்பதன் அடையாளமாக சாம்பல் பூசுதல் நடைபெறும். கொரோனா காலமாக இருப்பதால் தலையில் சாம்பல் தெளிக்கப்பட்டது.

தவக்காலமான இந்த 40 நாட்களில், தான தர்மம் செய்ய, இறை வேண்டலில் ஈடுபட, நோன்பிருக்க கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த 40 நாட்களில் முடிந்தவர்கள் ஒரு வேலை நோன்பு இருந்து, அசைவ உணவுகளைத் தவிர்த்து, ஏழைகளுக்கு உதவ அழைக்கப்படுகின்றனர். முடியாதவர்கள் சாம்பல்புதன், புனித வெள்ளி அன்று அசைவ உணவு தவிர்த்து, ஒருவேளை நோன்பு இருக்கவேண்டும்.

கிறிஸ்துவத்தில் 40 என்பது மிக முக்கியமான எண்ணாகப் பார்க்கப்படுகிறது. எனவே, தங்களைத் தாங்களே அன்பு செய்ய, தங்களை நேசிப்பது போல பிறரை நேசிப்பது எப்படி என்று உணர்ந்துகொள்ள இந்த 40 நாட்கள் தவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, இந்த நாட்களில் அடுத்தவர் மீது உள்ள அன்பை தர்மம் செய்வதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும். கடவுளின் அன்பைப் பெற இறை வேண்டல் செய்ய வேண்டும். நம் உடலை அன்பு செய்ய நோன்பிருக்க வேண்டும்.

நோன்பிருக்கும் போது அது யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொல்கிறார். நோன்பிருக்கிறேன் என்பதற்காக பழைய ஆடையை உடுத்துவது, முகத்தை வாட்டமாக வைத்துக்கொள்வது போன்றவற்றைச் செய்யக் கூடாது. வழக்கம் போல எந்த வித்தியாசத்தையும் வெளிப்படுத்தாமல் நோன்பிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 40 நாட்கள் தவக்காலம் கடந்த புதன் கிழமை சாம்பல் புதனுடன் தொடங்கியுள்ளது. வரும் மார்ச் 28ம் தேதி குருத்தோலை ஞாயிறு, ஏப்ரல் 2ம் தேதி புனித வெள்ளி, இறுதியில் ஏப்ரல் 4ம் தேதி ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு ஞாயிற்றைக் கொண்டாடப்பட உள்ளது.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *