கும்ப ராசியில் சூரியன் உடன் குடியேறும் காதல் நாயகன் சுக்கிரன் – யாருக்கு காதல் மலரும்? | Sukra peyarchi 2021: Venus transits from Makara to Kumbam

News

oi-Jeyalakshmi C

|

சென்னை: ஆடம்பரத்திற்கும் அழகியலுக்கும் காரணகர்த்தாவான சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாதம் ஒருமுறை இடம் பெயர்கிறார். பிப்ரவரி 21ஆம் தேதியன்று சுக்கிர பெயர்ச்சி நிகழ உள்ளது. இம்முறை மகரம் ராசியில் குரு, சனி, புதன் உடன் சஞ்சரித்த சுக்கிரன் தற்போது சூரியன் உடன் இணைந்து பயணிக்கப்போகிறார். சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இந்த சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி. அதனால்தான் வசதியாக வாழ்பவர்களைப் பார்த்து அவனுக்கு சுக்கிர திசை நடக்கிறதா என்று கேட்பார்கள். சுக்கிர திசை காலம் ஒருவருக்கு 20 வருடங்கள் நடைபெறும். மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசிகளின் ஆட்சி நாயகன். கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன், மீனம் ராசியில் உச்சமடைகிறார். இல்லறத்தில் கணவன் மனைவி இடையே தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. ஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். கும்பம் ராசியில் சூரியன் உடன் இணையும் சுக்கிரனால் யாருக்கு காதல் மலரும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சுக்கிரபகவான் நாளை முதல் ராசிக்கு பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்திற்கு வருவது நல்ல அம்சம். மனைவியால் பண வரவை அதிகரிக்கச் செய்யும். லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் உங்களுக்கு பல வழிகளில் இருந்தும் பணம் வரும். உங்கள் உறவினர்கள், வீட்டில் உள்ளவர்களுடன் சந்தோசமாக பொழுதை கழிப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு இது உற்சாகமான மாதம் உங்கள் காதல் துணையுடன் சந்தோசமாக உற்சாகமாக கொண்டாட்டத்தை அனுபவிக்கலாம். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாருக்கு நெய் தீபம் எற்றி வணங்குங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10வது இடத்தில் அமர்கிறார். தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளது உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலை பார்க்கும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாகவும் அன்பாகவும் பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே ஏற்படும் சின்னச்சின்ன சச்சரவுகளை எளிதாக சமாளியுங்கள். காதலர் தினத்தில் காதலிக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொடுத்து கூல் செய்யுங்கள். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை வெண்தாமரை மலர்களால் அர்ச்சித்து வணங்குங்கள்.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 9ஆம் இடமான கும்பத்தில் அமர்க்கிறார் சுக்கிரன். குடும்பத்திலும் தொழிலில் பாட்னர்களுடனும் உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் தம்பதியரிடையே நெருக்கம் கூடும் வாழ்க்கைத்துணையின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். 9 ஆம் இடத்தில் சுக்கிரன் சூரியனுடன் இணைய இருப்பதனால் ஆன்மீக பயணம் செய்வீர்கள். குடும்பத்தோடு சுற்றுலா சென்று வரலாம். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. வெள்ளிக்கிழமை நெய்தீபம் ஏற்றி சுக்கிரனை வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

கடகம்

கடகம்

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் அமர்கிறார் சுக்கிரன். பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தவும். கடகம் ராசிக்காரர்களுக்கு உடல் நலம் சற்றே பாதிப்படையும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். அதிகம் கவலைப்படாதீர்கள் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். காதலர் தினத்தன்று உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும். பரிகாரம் இருக்கிறது. நவகிரகங்களில் சுக்கிரபகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடை அணியலாம். பாதிப்புகள் குறையும்.

சிம்மம்

சிம்மம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமரப்போகிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகளை அதிகரிக்கும். சிலருக்கு காதல் மணியடிக்கும் காலமாகும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. சிறிய அளவில் உடல்நலக்குறைவு பாதிக்கப்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கும். தீய பெண்களில் நுழைவு வாழ்க்கை சிக்கலை உண்டு பண்ணிவிடும். வேலை விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும் வாய் வார்த்தைகளில் சொல்வதை விட எதையும் எழுத்துப்பூர்வமாகவே வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாரை வெண் தாமரை மலர்களினால் அர்ச்சனை செய்யவும்.

கன்னி

கன்னி

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறையப் போகிறார். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டிய காலமிது. பணியிடங்களில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்க சிவபெருமானை வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வதன் மூலம் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

காதல் நாயகனும் உங்கள் ராசி நாதனுமான சுக்கிரன் துலாம் ராசிக்கு 5ஆம் இடத்தில் அமரப்போகிறார். இதன் மூலம் காதல் உணர்வுகள் அரும்பும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்களின் துணை மீது காதல் மழை பொழியும் நேரமிது. பிள்ளைகளினால் மன நிம்மதி ஏற்படும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்பதால் துலாம் ராசிக்காரர்கள் இந்த மாதத்தை சிக்கலின்றி கடத்தி விடலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கு சுக ஸ்தானத்தில் உங்க களத்திர ஸ்தான அதிபதி சுக்கிரன் அமர இருப்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. மனைவி குழந்தைகளினால் மகிழ்ச்சி ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் யோசித்து வாங்க வேண்டும். சிவ ஆலயம் சென்று வெள்ளிக்கிழமைகளில் பச்சரிசி தானம் கொடுத்து வணங்கலாம்.

தனுசு

தனுசு

தனசு ராசிக்கு 3வது வீடான கும்ப ராசியில் சுக்கிரன் குடியேறுகிறார் சுக்கிரன். உங்களின் நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். தைரியமான சில காரியங்களை செய்வீர்கள். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் வாகன பயணங்களில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வணங்குங்கள்.

மகரம்

மகரம்

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் அமரப்போகிறார். மனைவி உடனான உறவில் உற்சாகம் பிறக்கும். வீட்டில் சந்தோச அலைகள் வீசும் காலமிது. சிலருக்கு புதிய காதல் உருவாகும். தம்பதியர் இடையே இருந்த பிணக்குகள் சரியாகும். தொழில் நண்பர்களுடன் உறவு மேம்படும். வீட்டில், சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய சந்தனம் வாங்கிக் கொடுக்கலாம்.

கும்பம்

கும்பம்

சுக்கிரன் உங்கள் ராசியில் அமரப்போகிறார். தங்கம், நகைகள் சேர்க்கை ஏற்படும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். வங்கியில் பணமிருந்தாலும் அவ்வப்போது சரிபார்த்துக்கொள்வது நல்லது. எதிரிகளிடம் சற்றே கவனம் தேவை. உணவில் கவனம் தேவை. சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் வெள்ளிக்கிழமைகளில் குங்குமப்பூ கலந்த பாயசத்தை துர்க்கா தேவிக்கு நிவேதனம் செய்தது வழிபட வேண்டும்.

மீனம்

மீனம்

உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் சுக்கிரபகவான் அமர்வதால் சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். சிலர் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். எந்த பிரச்சினை என்றாலும் புத்திசாலித்தனமாக சமாளிக்கலாம். உங்கள் செலவுகளை சுப செலவுகளாக மாற்றலாம். வெள்ளிக்கிழமை பெருமாள் ஆலயங்களில் தரிசனம் செய்யலாம்.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *