சட்டசபைத் தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் யோகம் யாருக்கு கிடைக்கும் தெரியுமா | Raja yogam planets combination – Who win the assembly elections

News

oi-Jeyalakshmi C

|

சென்னை: முதல்வராகவேண்டும் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருக்கத்தான் செய்யும். ஆசை இருக்கு அரசாள யோகம் வேண்டுமே என்று பலரும் கேட்கலாம். தமிழக சட்டசபை நடைபெற உள்ள இந்த நேரத்தில் முதல்வர் கனவில் பல அரசியல்வாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர். பிறந்த ஜாதகத்தில் அரசாளும் யோகத்தை தரக்கூடிய கிரக அமைப்புகள் இருந்தால் மட்டுமே அரசியல்வாதிகளால் முதல்வர் நாற்காலியில் அமர முடியும். உங்கள் ஜாதகத்தில் கீழே காணப்போகும் யோகங்கள் இருந்தால் சாத்தியமே.

ஒருவர் நிஜமான ராஜயோகத்தை அனுபவித்து அரசனாகவோ அல்லது அரசனுக்குச் சமமான அதிகாரம் செய்யக் கூடிய அமைப்புகளிலோ இருக்க வேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருக்க வேண்டும். சந்திரன் சூரியனுடன் இணைந்தோ அல்லது சூரியனுக்கு, நான்கு, ஏழு, பத்தாமிடங்களிலோ சந்திரன் இருந்தால், ஜாதகர் ராஜயோகம் பெறுவார்.

சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருந்தாலும், அவர்கள் அமர்ந்திருக்கும் வீடுகளும் ராசிக்கோ, லக்னத்துக்கோ கேந்திர வீடுகளான ஒன்று, நான்கு, ஏழு, பத்து என இருந்தாலோ அது முதல் தரமான ராஜயோகம்.

ஒருவர் ஜாதகத்தில் ராஜகிரகங்கள் சூரியன், புதன், செவ்வாய், சனி, குரு, சுக்கிரன், ராகு பலமாக இருக்க வேண்டும். சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று, லக்னத்துக்கு 6, 7, 9 ம் இடத்து அதிபதிகள் ஆட்சி பெற்றிருந்தால், தன்னுடைய சிறிய வயதிலேயே அரசியலில் பெரும்புகழ் பெற்று அரியணையில் அமர்வார். நாடாள வேண்டும் என்று ஆசை இருந்தால் மட்டும் போதாது அதற்கான யோகம், ஜாதகத்தில் அம்சங்கள் கிரகங்களின், சேர்க்கை, பார்வை இருக்க வேண்டும். ராஜ கிரகங்கள் நமக்கு சாதகமாக இருந்தால்தான் சாதகமான நேரத்தில் ராஜ பதவி தேடி வரும். கஜ கேசரி யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், ஸ்ரீநாத் யோகம், விபரீத ராஜயோகம், சஷயோகம், விஷ்ணு யோகம், நீச பங்க ராஜயோகம் ஆகிய யோகங்களில் சில யோகங்கள் இருந்தால் அந்த ஜாதகக்காரர் கண்டிப்பாக அரசியலில் சிறப்பான நிலையை அடைவார்கள்.

கஜகேசரி யோகம்

கஜ கேசரி யோகம் அமையப்பெற்ற நபர்களுக்கு செல்வம், செல்வாக்கு, புகழ், அந்தஸ்துடன் கூடிய தலைமைப் பதவி தானே தேடி வரும். எந்த கஷ்டங்களையும் எளிதில் கடந்துவிடுவார்கள். எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை உடைத்து தூள் தூளாக்கி விடுவார்கள். வாழ்க்கையில் மிக உயரிய இடத்திற்கு செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய கேந்திரத்தில் குரு இருந்தால் கஜகேசரி யோகம் கிடைக்கும். குருவும், சந்திரனும் ஆட்சி, உச்சம், நட்பு என்கிற நிலையில் இருந்தால் மட்டுமே இந்த யோகம் முழு பலனை அளிக்கும். இல்லையெனில், இதற்கான பலன் குறையக்கூடும்.

அரசாட்சி யோகம்

அரசியலில் பெரிய பதவிகள் வகிக்க காரணமான யோகங்களில் அரசாட்சி யோகமும் ஒன்று. அது மட்டுமல்லாமல் இந்த யோகத்தின் மூலம் அரசாங்க உயரதிகாரியாகவும் ஆகலாம். குரு நின்ற ராசியாதிபதி, சந்திரனுக்கு கேந்திரத்திலும் 1, 4, 7, 10 சந்திரன் நின்ற ராசியாதிபதி சுக்கிரனுக்கு கேந்திரத்திலும் இருந்தால் இந்த யோகம் ஏற்படும். ராகு நின்ற ராசியாதிபதி லக்கினத்திற்கு, சுக்கிரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.

சக்கரவர்த்தி யோகம்

முதல்வராக ஆட்சி செய்வதற்குரிய அத்தனை தகுதிகளையும் இந்த யோகம் கொடுக்கும். ஒருவேளை ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் அதற்கு நிகரான அந்தஸ்தை தந்துவிடும். பெரிய தர்மப்பிரபுவாகவும், தெய்வத் திருப்பணிகளில் ஈடுபாடு கொண்டவராகவும் இவர்கள் இருப்பார்கள். லக்கினாதிபதி உச்சம் பெற்று, அவருடன் 2, 9 ம் பாவாதிபதிகள் இணைந்து 10 ம் அதிபதி பலம் பெறுவது சக்கரவர்த்தி யோகம்.

அரச கேந்திர யோகம்

லக்கனத்திற்கு 1, 4, 7, 10ல் அனைத்து கிரகங்களும் இருந்து அவை ஆட்சி உச்சம் என்கிற உயரிய நிலையில் இருந்தால் உருவாவது இந்த யோகம். வாழ்க்கையில், நினைத்துப் பார்க்க முடியாத அளவு அனைத்து வசதிகளையும் பெற்றுத் தரும். மேலும் பெரிய அளவில் மக்கள் சக்தியை தன்பால் ஈர்க்கும் வல்லமையும் கொண்டது.

அகண்ட சாம்ராஜ்ய யோகம்

அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாதவனைக் கூட அரசனாக்கும் சக்தி உள்ளது இந்த யோகம். இன்றைய காலகட்டத்தில் அமைச்சர், முதல்வர், ஆளுநர், பிரதமர் என்பது போன்ற உச்சகட்ட பதவிகளை இது குறிக்கிறது. 2, 9, 11 ஆம் பாவாதிபதிகள் சந்திரனுக்கு 1, 4, 7, 10 எனப்படும் கேந்திரத்தில் இருக்க, குரு 5, 11 ம் பாவாதிபதியாகி 2 ம் இடத்தில் இருக்க வேண்டும்.

அல்லது குரு 2, 5, 11 ம் இடத்தில் இருக்க, குரு நின்ற வீட்டின் அதிபதி, சந்திரனுக்கு 1, 4, 7, 10, 5, 9 ஆகிய ஏதோ ஓரிடத்தில் இருக்க வேண்டும். மேற்குறிய இரண்டுவித அமைப்புகளில் எது இருந்தாலும் அது அகண்ட சாம்ராஜ்ய யோகமே.

கலாநிதி யோகம்

கலாநிதி யோகம் அமையப்பெற்ற ஜாதகர்கள் அறிவாளிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். அறிவுக்கு பஞ்சம் இருக்காது. நல்ல திறமையையும் புத்திசாலித்தனத்தையும் கொடுக்கும். அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்போ அல்லது அரசாங்க உயர் பதவிகள் வகிக்கும் வாய்ப்பையோ பெற்றுத்தரும் யோகம் இது. ஜாதகத்தில் குரு 2 அல்லது 5 ம் வீட்டில் இருந்து புதன், சுக்கிரனுடன் சேர்ந்திருந்தாலும் அல்லது 2, 5 ம் இடங்கள் புதன், சுக்கிரனின் ஆட்சி வீடாக இருந்தாலும் இந்த யோகம் ஏற்படும்.

சக்கர வியூக யோகம்

தலைமைப் பதவிக்கு தகுதியான யோகம் இது. சிறந்த அறிவாளியாகவும், சாதுர்யம் மிக்கவராகவும் இவர்கள் இருப்பார்கள். செல்வமும், செல்வாக்கும் குறைவில்லாமல் இவர்களிடம் இருக்கும். இந்த யோகம் அரிதிலும் அரிதான ஒன்று. பிறந்த ஜாதகத்தில் ராகு, கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில், ராசிக்கு ஒரு கிரகம் வீதம் இருந்து, இந்த ராசிகளில் ஏதோ ஒன்று லக்கினமாக அமைவது சக்கர வியூக யோகம்.

சக்கர யோகம்

சக்கர யோகம் அமையப்பெற்ற ஜாதகர்களுக்கு எம்.எல்.ஏ முதல் குடியரசுத்தலைவர் வரை எந்த பதவி வேண்டுமென்றாலும் கிடைக்கலாம். இதற்கு மூன்று வித யோக நிலைகள் கூறப்பட்டுள்ளன. இதில் எது இருந்தாலும் பதவி தேடி வரும். ராகு, கேது தவிர மற்றைய ஏழு கிரகங்களும் ஒற்றைப்படை ராசி எனும் ஆண் ராசிகளில் இருக்க வேண்டும். 10 ஆம் இடத்தில் ராகு இருக்க, அந்த வீட்டின் அதிபதி லக்கினத்தில் இருக்க, லக்கினாதிபதி 9 ல் இருக்க, இவர்கள் சுபகிரகங்களால் பார்க்கப்பட வேண்டும். 10 ல் ராகு இருக்க பத்தாம் வீட்டு அதிபதி, 1 அல்லது 5 ஆம் வீட்டில் இருக்க 9 ஆம் பாவாதிபதி 7ஆம் வீட்டில் இருக்க வேண்டும்.

ஹம்ச யோகம்

ஜாதகத்தில் குரு லக்னத்துக்கு கேந்திரம் எனப்படும் 4,7,10 ஆம் இடத்திலிருந்து, குரு உச்ச பலம் பெற்று நின்றால், இந்த யோகம் ஏற்படும். இந்த அமைப்புடன், சூரியனும் செவ்வாயும் பலம் பெற்றால், அந்த ஜாதகர் ஒரு மிகச் சிறந்த ஒரு நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய ஒரு அரசியல் தலைவராகப் பெயர் எடுப்பார். மக்களிடம் அதிக செல்வாக்கும் உடையவராகத் திகழ்வார். இந்த யோகத்தோடு ராஜ கேந்திரயோகம் எனப்படும் யோகம் ஏற்பட்டால், அதாவது எல்லா கிரகங்களும் கேந்திரத்தில் பலமானால், அவரை யாராலும் அசைக்க முடியாத ஓர் ஒப்பற்றத் தலைவனாகப் பெயரெடுப்பார்.

விபரீத ராஜயோகம்

திடீர் பதவிகளை தேடி தரும். ஜாதகத்தில் கிரகங்கள் ஆறு எட்டு 12ஆம் இடங்களில் ஆட்சி பெற்று அமைந்திருப்பது யோகம். அதே போல ஒரு கிரகம் நீசம் பெற்றிருந்து அந்த நீசம் பெற்ற கிரகம் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்ற கிரகத்துடன் நீசம் பெற்ற கிரகம் இணைந்திருப்பது நீச பங்க ராஜயோக அமைப்பை தரும். இந்த யோகம் பெற்றவர்களுக்கு திடீர் அரசாளும் யோகம் தேடி வரும். இந்த யோகங்கள் மட்டுமில்லாமல் இன்னும் நூற்நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *