புளி மாங்க புளிப்பே… சந்தானத்தின் சிரிப்பே… `பாரிஸ் ஜெயராஜ்’ ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!
சந்தானம் பார்க்க ஸ்லிம்மாக இருந்தாலும் ‘உடம்புக்கு ஏதும் பிரச்னையோ’ என்பதுபோல சில இடங்களில் சோர்வாகத் தெரிகிறார்.
சந்தானத்தின் தந்தையாக ப்ருத்வி ராஜ். இரண்டாம் பாதியில் இரட்டை இன்னிங்ஸால் சிக்கலில் சிக்கிக்கொண்டு அவர் செய்யும் அட்ராசிட்டீஸ்தான் படத்தையே நகர்த்துகிறது. ஆனால், இதெல்லாம் உண்மையிலேயே நடக்குமா எனக் கேள்வியும் எழாமல் இல்லை.
கதாநாயகியாக அனைகா சோதி. ‘நடிப்புனா க்யா?’ எனக் கேட்பார் போல. லிப் சிங்க்கும் இல்லை, எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவும் இல்லை. டெம்ப்ளேட் தமிழ் சினிமா கதாநாயகியாக திரையில் வந்துபோகிறார். டூயட் இல்லை என்பது சந்தோஷம்!
படத்தில் ஹீரோவே கானா பாடகர் என்பதால் ‘கானா ஸ்பெஷலிஸ்ட்’ சந்தோஷ் நாராயணனுக்கு இறங்கி கலக்கும் வாய்ப்பு. அனைத்துமே கானா பாடல்கள்தான். ஆனால், மெட்ராஸ் கானா மிஸ்ஸிங். ‘புளி மாங்கா புளிப்’ பாடல் மட்டும் தியேட்டரைவிட்டு வெளியே வந்தப் பிறகும் முணுமுணுக்கவைக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட படமே முடிந்த பிறகு வருகிறது இந்தப் பாடல்.