மகர ராசியில் ஆறு கிரக சேர்க்கை – யோகமும் அதிர்ஷ்டமும் யாருக்கு வரும் – பரிகாரம் என்ன? | Six planet conjunction on Thai Amavasai day in Makara Rasi

News

oi-Jeyalakshmi C

|

சென்னை: தை அமாவாசை நாளில் சூரியன், சுக்கிரன், புதன், குரு, சந்திரன்,சனி ஆகிய கிரகங்கள் மகர ராசியில் இணைந்திருப்பதால் எதுவும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கையால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் என்று பார்க்கலாம்.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 26 முதல் 28 வரை தனுசு ராசியில் சூரியன், சந்திரன், சனி, குரு, புதன்,சுக்கிரன் ஆகிய ஆறு கிரகங்கள் இணைந்தன. இந்த கிரகங்களின் சேர்க்கை நடந்த போது சூரிய கிரகணமும் நிகழ்ந்தது. இந்த நிகழ்வினால் உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியது. பல கோடி மக்களை பாதித்தது. பொருளாதார மந்த நிலையும் ஏற்பட்டது.

வைரஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு விட்டதால் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் ஒரு ஆறு கிரக சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இந்த முறை கால புருஷ தத்துவத்திற்கு பத்தாம் வீடான கர்ம ஸ்தானமாக மகர ராசியில் ஆறு கிரகங்கள் இணைந்துள்ளன. இந்த கிரகங்களின் சேர்க்கையால் திடீர் அதிர்ஷ்டமும் கோடீஸ்வரர்கள் ஆகும் யோகமும் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மகர ராசியில் 6 கிரகங்கள்

மகர ராசியில் 6 கிரகங்கள்

கடந்த 1962 ஆம் ஆண்டு மகர ராசியில் 8 கிரகங்கள் இணைந்தன. இப்போது மகரம் ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைந்துள்ளன. இந்த கிரக சேர்க்கையால் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். ரிஷபம் ராசியில் உள்ள ராகு விருச்சிகம் ராசியில் உள்ள கேதுவிற்கு இடையே கிரகங்கள் அடைபட்டுள்ளன. இந்த அமைப்பிற்கு கால சர்ப தோஷம் என்று ஜோதிடத்தில் சொல்வார்கள்.

அரசியல் மாற்றம்

அரசியல் மாற்றம்

கர்ம காரகன் சனியின் வீட்டில் சனியுடன் ஆறு கிரகங்கள் இணைந்துள்ளன. கர்ம வீடு தொழில், ஜீவன ஸ்தானமான பத்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைந்துள்ளன. இயற்கை மாற்றம், பருவகால மாற்றங்கள் ஏற்படக்கூடும். உலக அரசியலில் பல மாற்றங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இருப்பினும் ஒரு சில முக்கிய பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும் நடக்க வாய்ப்புள்ளது.

கிரகங்கள் கூட்டணியால் பாதிப்பு

கிரகங்கள் கூட்டணியால் பாதிப்பு

ராசி சக்கரத்தில் 10ம் இடமான மகரத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவதால் மகரம் ராசிக்காரர்கள் வீட்டிலும் வெளியிடத்திலும் கவனமாக இருப்பது அவசியம். மகர ராசி சனியின் ஆட்சி வீடு. இங்கு சனி ஆட்சி பெற்று இருப்பதோடு, குரு எனும் சம கிரகமும், சூரியன், சந்திரன் எனும் எதிரி கிரகங்கள் இருக்கின்றன. புதன், சுக்கிரன் ஆகிய நட்பு கிரகங்கள் இந்த ராசியில் இணைந்துள்ளன.

மகர ராசிக்காரர்கள் கவனம்

மகர ராசிக்காரர்கள் கவனம்

மகர ராசியில் ஆறு கிரகங்கள் இணைவதால் மகரம் ராசிக்காரர்கள் கவனமும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் உங்கள் வேலையில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டாலே போதுமானது.

விரைய செலவுகள் வரும்

விரைய செலவுகள் வரும்

கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. விரைய ஸ்தானத்தில் 6 கிரகங்கள் இணைந்துள்ளன. சனியின் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளதால் கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் விரைய செலவுகள் வரும். பணம் விசயங்களில் கவனம் தேவை. பாதிப்புகள் குறைய பரிகாரம் செய்ய வேண்டும். தை அமாவாசை நாளில் சிவ தரிசனம் செய்வது நல்லது.

சிவ தரிசனம் செய்யவும்

சிவ தரிசனம் செய்யவும்

கடக ராசிக்கு ஆறு கிரகங்களின் பார்வை நேரடியாக கிடைக்கிறது. அதே போல குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு, மீனம், சூரியன் அதிபதியாகக் கொண்ட சிம்மம், சுக்கிரன் அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள், புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். இந்த கிரக சேர்க்கையால் பிப்ரவரி 11ஆம் தேதி தை அமாவாசை நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

அன்னதானம் செய்யவும்

அன்னதானம் செய்யவும்

மேஷம், விருச்சிகம், துலாம், கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கிரகச் சேர்க்கையால் பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டம் வரும். வேலையில் முன்னேற்றமும் இடமாற்றமும் ஏற்படும். பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்பதால் பயப்பட தேவையில்லை என்றாலும் தை அமாவாசை நாளில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் கொடுக்கவும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கவும்.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *