மாசி மாதம் ராசி பலன் 2021: ரிஷப ராசிக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும் | Masi matha Rasi Palan: Rishapa rasi Masi month Rasi Palan

Astrology

oi-Jeyalakshmi C

|

சென்னை: மாசி மாதம் கும்பம் மாதம். தமிழ் காலண்டரில் 11வது மாதம். இந்த மாதம் முழுவதும் சூரியன் கும்பம் ராசியில் பயணம் செய்வார். கூடவே புதன், சுக்கிரனும் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கின்றனர். மாசி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். இந்த மாசி மாதத்தில் 13-02-2021 முதல் 13-03-2021 வரை ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

மாசி மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால், மகர ராசியில் உள்ள புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். பிப்ரவரி 21ஆம் தேதி செவ்வாய் மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். ராகு உடன் செவ்வாய் இணைகிறார். சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சனியை விட்டு விலகி சூரியனுடன் இணைகிறார் சுக்கிரன். கூடவே புதன் மாத இறுதியில் இடப்பெயர்ச்சி அடைந்து சூரியன் சுக்கிரனுடன் இணைகிறார். மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்று பார்க்கலாம்.

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே இந்த மாசி மாதத்தில் பணத்தட்டுப்பாடு நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். எடுத்த காரியம் வெற்றியடையும். . இது நாள் வரைவேலையில் நிம்மதியில்லாமல் ஒருவித அழுத்தத்தில் இருந்திருப்பீர்கள். உங்களின் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும், இனி மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும்.

இனி வரும் காலம் நல்ல காலம்தான். செவ்வாய் உங்கள் ராசியில் ராகு உடன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. ஒன்பதாம் வீட்டில் குரு, சனி இணைந்திருப்பது சிறப்பு. மங்கள காரியங்கள் தொடர்ந்து நடைபெறும். ஆன்மீக விழாக்களில் பங்கேற்பீர்கள். சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தை பார்வையிடுவது சிறப்பு. வீண் பழி நீங்கும். எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் அதிகரிக்கும்.

உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். இரவு பகல் பாராது உழைப்பீர்கள். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் மனதில் இருந்த சங்கடங்கள் நீங்கும். வெற்றியை நோக்கிய பயணம் தொடங்குகிறது. உங்களின் இலக்குகளை அடைவதற்கான பயணம் இந்த மாதத்தில் இருந்து தொடங்குகிறது.

மாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா

அதிர்ஷ்டம் கை கூடி வரப்போகிறது. கவலைகள் தீரும் முகத்தில் இருந்த கவலை ரேகைகள் மறையும். சொத்துப்பிரச்சினைகள் நீங்கும். சுப செய்திகள் அதிகம் நடைபெறும். கலைத்துறையை சேர்ந்தவர்களின் கவலைகள் நீங்கும் பாராட்டுகள் கிடைக்கும். உயர்பதவி தேடி வரும். சொந்த பந்தங்களால் நன்மைகள் நடைபெறும். மன குழப்பங்கள் நீங்கும்.

பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த தொல்லைகள் நீங்கும் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் மங்கல காரியம் கை கூடி வரும். சுப செய்திகள் தேடி வரும். திருமண யோகம் கை கூடி வரும். மாணவர்களுக்கு உற்சாகமான மாதம். புதிய விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். மகிழ்ச்சிகரமான மாதம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வருமானம் பல மடங்கு பெருகும். கூட்டுத் தொழில் லாபத்தை கொடுக்கும். மகா சிவராத்திரி நாளில் சிவ ஆலய தரிசனம் செய்வதால் பாதிப்புகள் நீங்கி நன்மையை கொடுக்கும்.

அநாவசிய இரவு நேர பயணங்களை தவிர்த்து விடவும். வேலை, தொழில், வியாபாரத்தில் தொட்டது துலங்கும். வளர்ச்சிகள் அதிகரிக்கும் லாபம் பெருகும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். தொழில் முதலீடுகளில் செய்வது லாபத்தை கொடுக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வண்டி வாகனம் வாங்கலாம். தந்தை வழி உறவினர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். வயிறு பிரச்சினைகள் வரலாம் உணவு விசயத்தில் கவனம் தேவை. மகா சிவராத்திரி நாளில் குல தெய்வ வழிபாடு செய்யவும். ரத சப்தமி நாளில் சூரிய வழிபாடு செய்யுங்கள் நன்மைகள் நடைபெறும். மங்கள காரியங்கள் கை கூடி வரும். அரசு வேலைகள் கிடைக்கும்.நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *