ரஜினி வீட்டில் கமல்… மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு கேட்டாரா?!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று காலை நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப்பேசியிருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டப்பிறகு ‘அரசியலில் இருந்து விலகுகிறேன்’ என அறிக்கைவிட்டு வெளியே எங்கும் வராமலேயே இருந்தார் ரஜினி.