“ஸ்டூடியோக்கள் இல்லைன்னா இளையராஜாவே இல்லை!” – சாரதா ஸ்டூடியோ ஜெயந்தி கண்ணப்பன்

மாடர்ன் தியேட்டர்ஸ், ஏவிஎம், விஜயவாஹினுன்னு பார்க்கிறதுக்கே ஒருவித கம்பீரமான தோற்றத்துடன், வாசல்ல வந்து நிக்கிறதுக்கே தயங்கின‌ ஸ்டூடியோக்கள்லாம் இன்னைக்கு முன்னேமாதிரி முழுவீச்சுல இல்லாமப் போயிருக்கலாம். ஆனால் அந்த ஸ்டூடியோக்கள்ல நிகழ்த்தப்பட்ட சாதனைகள் ஒருநாளும் மறக்க முடியாதவை. எங்களுடைய சாரதா 11 ஏக்கர் பரப்புல பரந்து விரிந்திருந்த ஸ்டூடியோ. சாரதா படம் ஜனாதிபதி பதக்கம் வாங்கினதால என்னுடைய மாமனார் வீட்டுக்கும் அலுவலகத்துக்குமே கூட ‘சாரதா’ங்கிற பெயரையே வச்சார். ஆனாலும் நாங்களே ‘திருடாதே’ங்கிற படத்தை பரணி ஸ்டூடியோவுலயும் எடுத்திருக்கோம். அரசியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த படம் அது.

இளையராஜா ஸ்டூடியோ

ஏன், டிவியை முதன்முதலாக் காட்டிய ‘பட்டணத்தில் பூதம்’ படம் ஸ்டூடியோவுல எடுக்கப்பட்ட படம்தான். ஸ்டூடியோக்களின் சாதனைகளுக்கு இப்படி நிறையச் சொல்லிட்டே போகலாம். சினிமாக் கனவுகளுடன் சென்னைக்குப் படையெடுத்த எவ்வளவோ திறமையான இளைஞர்களின் வாழ்க்கை இந்த ஸ்டூடியோக்களுக்கு வந்தவுடன் மாறியிருக்கு. இதெல்லாம்தான் வரலாறு. இந்த சரித்திரத்தைக் கொச்சைப்படுத்திப் பேசறது அப்படிப்பட்ட ஸ்டூடியோக்களை நிறுவியவர்களின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுவது போலத்தான். இதை எங்களால ஏத்துக்க முடியாது. ஸ்டூடியோக்கள் இல்லைன்னா இளையராஜாவே இல்லை!

`எப்படி எப்படியோ இருந்தவங்கல்லாம் இன்னைக்கு காணாமப் போயிட்டாங்க’னு சொல்றப்ப அந்த வார்த்தைகள், இன்னைக்கும் அந்த பசுமையான நினைவுகளைச் சுமந்துகிட்டிருக்கிற அந்த ஸ்டூடியோக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவங்களை ரொம்பவே காயப்படுத்தும்னு இளையராஜா அவர்கள் யோசிச்சுப் பேசியிருக்கணும்.” என்றார் ஜெயந்தி கண்ணப்பன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *